இந்திய தேர்தல் ஆணையம், 23 ஆண்டுகளுக்கு பின்னர், தருமபுரி மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்றத் தொகுதிகளிலும் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. இதனை முன்னிட்டு, விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் செயல்முறை குறித்து விரிவாக விளக்கப்பட்டது.
இப்பணிக்காக 1,501 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்காளர்கள் தங்களது விவரங்களை சரியாக நிரப்பி, கையொப்பமிட்டு, வண்ணப் புகைப்படத்துடன் சேர்த்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், தேவையான வழிகாட்டுதல்களை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி கவிதா, கோட்டாட்சியர்கள் திருமதி காயத்ரி (தருமபுரி), திரு செம்மலை (அரூர்) உள்ளிட்ட அதிகாரிகளும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

.jpg)